Tamil Fonts
 
 
 
 
 
 
சிறந்த நிர்மாணத்துறை கைத்தொழிலுக்கான  CIDA வின் (ICTAD இன் பதில் நிறுவனம்) தேசிய விருதுகள்
 
நிர்மாணத்துறையில் சிறந்தவர்களுக்கான  ஆண்டின் தேசிய விருதுகள்  இலங்கையின் நிர்மாணக் கைத்தொழிற் துறையின்  தொழில்வாண்மையையும் மற்றும் தரத்தை ஊக்குவிப்பதற்கான அதன் பங்களிப்பினையும் எடுத்துக் காட்டுகிறது.
 
1990 ஆம் ஆண்டில்  ஆரம்பிக்கப்பட்ட  நிர்மாணக் கைத்தொழில் தேசிய விருதுகளானது நிர்மாணத்துறைக் கருத்திட்டங்களில் சிறப்புத் தேர்ச்சியை அடைந்து  கொள்வதற்குப் புதிய மற்றும் பொருத்தமான தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தல் ,கைவினையாளர்கள் / வர்த்தகர்களின் பயிற்சி மற்றும் பதவி உயர்வுகளில் பங்குகொள்ளல், தரத்திலும் தொழில்நுட்ப வல்லுவத்திலும் உயர்தரமான தொழில் வாண்மை, நிர்மாணத்துறை முகாமைத்துவம் மற்றும் ஒழுங்கமைப்பு  ஆகியவற்றில் கூடிய செயற்திறனை அதிகரிக்கிறது.
 
இதற்கு மேலதிகமாக கட்டட நிர்மாணக் கருத்திட்டங்களுக்கு நிர்மாணத்துறை சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன. (இது இன்று கட்டுமானத் துறையில் தரக் குறியீடொன்றாக மாறியுள்ளது). பாதைகள், பாலங்கள், நீர் வழங்கல், கழிவு நீர் வடிகாலமைப்பு ஆகிய சிவில் பொறியியல் கருத்திட்டங்களுக்கு “நிர்மாணத்துறை செயற்திறனுக்கான தேசிய விருதுகள்”  2005  ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது.
 
மேலும் நிர்மாணத்துறையில்  புதிய   தொழில் நுட்பங்கள்/ நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான விருதுகள் 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. புதிய தொழில் நுட்பங்கள்/ நுட்பங்களைப் பயன்படுத்துவதில் உள்ள  செலவுகள் மற்றும் நேரசேமிப்பு, தரம் மற்றும் வளப் பயன்பாடு ஆகிய விடயங்கள் இவ்விருது வழங்கும் போது கருத்திற் கொள்ளப்படுகின்றன.
 
பொறியியல், கட்டடக் கலை, அளவுக் கணிப்பு மற்றும் பொதுவான கட்டுமானத்   தொழிற் துறை ஆகிய அடிப்படைத் துறைகள் 04 இல்  புகழ்பெற்ற தொழில்வாண்மையாலர்களுக்கான அங்கீகாரத் திட்டமொன்றை 2011 ஆம் ஆண்டு   ICTAD ஆரம்பித்தது. “கட்டுமானத் கைத்தொழிற் துறையில் புகழ்பெற்ற  வாண்மையாளர்களுக்கான விருது”  ஆக இவ்விருது அமைகிறது. இவ் விருது  ஒவ்வொறு மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படுகின்றது.
 
மேலும் நாடு முழுவதிலும் வியாபித்துள்ள அனைத்து வகையான கட்டுமானக் கருத்திட்டங்களையும் நிறைவேற்றுவதில் சமூகத்தின் தலையீட்டை  அங்கீகரிப்பதற்காக 2012 ஆம் ஆண்டில் இன்னுமொறு விருது “தெரிவு செய்யப்பட்ட மக்கள் சமூக கருத்திட்டங்கள்”  ஆரப்பித்து வைக்கப்பட்டது.
 
2012 ஆம் ஆண்டு புதிய திட்டங்களில் மற்றொரு அம்சம் “தேசிய பசுமை கட்டுமான விருதுகள்” ஆகும். இது CIDA மற்றும்  இலங்கை பசுமை கட்டட நிர்மாணக் கவுன்சில்  ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இத்திட்டத்தில் பேண்தகு பகுதி, எரிசக்தி சேமிப்பு, உள்ளக சுற்றாடல் தரம் மற்றும்  கழிவுப் பொருள் முகாமைத்துவம் போன்ற சூழலைக் கட்டியெழுப்பும் முக்கிய அம்சங்கள் கவனத்திற் கொள்ளப்படுவதுடன் பேண்தகைமையின் அளவு மதிப்பீடு செய்யப்படுகிறது.
 
கட்டட நிர்மாணக் கருத்திட்டங்களுக்கான செயற்திறன் விருதுகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மக்கள் சமூக கருத்திட்டங்களுக்கான  செயற்திறன் விருதுகள் தற்போது வழங்கப்படும் ஏனைய வருடாந்த விருதுகளாகும்.
 
1) யார் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
 
விருதுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
நிர்மாண ஒப்பந்ததாரர்கள்  தேசியப் பதிவு மற்றும் தரப்படுத்தலின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்.
எந்தவொரு அரச முகவர் நிலையம் மூலமாகவும் வெளியிடப்பட்டுள்ள கறுப்புப் பட்டியலிடப்பட்ட  அல்லது இடைநிறுத்தப்பட  ஒப்பந்தக்காரர்கள் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாதிருத்தல் வேண்டும்.
 
2) எவ்வகையான கருத்திட்டங்கள் கவனத்திற்கொள்ளப்படும், விருதுகளுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்
 
1. கட்டட நிர்மாணக் கருத்திட்டங்களுக்கான சிறப்பு மற்றும் திறமை விருதுகள்
 
நிர்மாணத்துறையில் சிறப்பு மற்றும் திறமை விருதுகள் வழங்கும்போது  கட்டட நிர்மாணப் பணிகளுடன் தொடர்புடைய கருத்திட்டங்கள் கவனத்திற் கொள்ளப்படுகின்றன. ஏனைய பல்துறைக் கருத்திட்டங்களைப் பொருத்தவரையில் கருத்திட்டத்தின் நியாயமான பகுதி புதுக் கட்டட நிர்மாணப் பணிகளில் உள்ளடங்கி இருந்தால் மாத்திரம் போட்டிக்காக கவனத்திற்  கொள்ளப்படும். கட்டட மேம்பாடுகள் மற்றும் திருத்தங்கள் போட்டிக்காக கவனத்திற் கொள்ளப்படமாலட்டாது. அத்தோடு  விருதுகளுக்காக சமர்ப்பிக்கப்படும் நிர்மாணக் கருத்திட்டங்கள் கட்ட்டிடக் கலை, கட்டமைப்பு பொறியியல், அளவு மதிப்பீடு மற்றும் பொறியியல் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த தகுதிவாய்ந்த வல்லுநர் குழுவினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் மதிப்பீடு செய்யப்படும்.
 
விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்
 
கட்டட நிர்மாணக் கருத்திட்டங்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் வருடம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு குறிப்பிட்ட கட்டட கருத்திட்டத்துக்கு கருத்திட்டத்தின் தொடக்கத்தில் ஒப்பந்தக்காரரர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
 
11 சிவில்  பொறியியல் நிர்மாண கருத்திட்டங்களுக்கான செயற்திறன் விருதுகள்
 
பெருந் தெருக்கள், பாலங்கள், நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு , நீர் பாசனம் மற்றும் நில வடிகாலமைப்பு போன்ற சிவில் பொறியியல் தொடர்பான எல்லாக் கருத்திட்டங்களும் இத்திட்டத்தின் கீழ் கவனத்திற்  கொள்ளப்படும்.
 
சிவில் பொறியியல் கருத்திட்டங்களுக்கான செயற்திறன் விருதுப் போட்டி மற்றும் ஏனைய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வருடா வருடம் பத்திரிகைகள் வாயிலாக கோரப்படுகின்றன. இத் திட்டத்தில் நிறைவு செய்யப்பட்ட கருத்திட்டங்களும் ஒப்படைக்கப்பட்ட கருத்திட்டங்களும் கவனத்திற்  கொள்ளப்படும்.
 
111 பசுமை கட்டுமான  சிறப்பு விருது
 

இலங்கை பசுமை கட்டட நிர்மாணக் கவுன்சில்   மற்றும் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை என்பன இணைந்து பசுமை நிர்மாண  சிறப்பு விருதுகளை வழங்குகின்றன. நீர் மற்றும் எரிசக்தி சேமிப்பு, பேண்தகுநிலை, உள்ளக சுற்றாடல் தரம் மற்றும்  கழிவுப் பொருள் முகாமைத்துவம் மற்றும் இன்னும் பல அம்சங்களையும் முக்கிய விடயங்களையும் கருத்திற் கொண்டு விசேட குழுவொன்றினால் கருத்திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட​, இறுதியாக விருதுக்கான கருத்திட்டங்கள் தெரிவு செய்யப்படும். செயற்திறன் விருதுப் போட்டிக்கான விண்ணப்பங்களுக்கு இணைவாக வருடா வருடம் பத்திரிகைகள் வாயிலாக விண்ணப்பங்கள் கோரப்படும் . இத் திட்டத்தில் நிறைவு செய்யப்பட்ட கருத்திட்டங்களும் ஒப்படைக்கப்பட்ட கருத்திட்டங்களும் கவனத்திற்  கொள்ளப்படும்.

 
IV தெரிவு செய்யப்பட்ட சமூக கருத்திட்டங்களுக்கான தேசிய விருதுகள்
 

கட்டட நிர்மாணங்கள், சிவில் பொறியியல்  அல்லது ஏனைய உட்கட்டமைப்புத் துறைகளில் சமூகத்தின் ஈடுபாடுட்டுடன் உருவாக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்ட கருத்திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் கவனத்திற்  கொள்ளப்படும்.

விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வருடா வருடம் பத்திரிகைகள் வாயிலாக கோரப்பட்டு ஏனைய செயற்திறன் விருது வகைப்படுத்தல்களுடன் பிரசுரிக்கப்படும்.
 
V புத்தாக்க தொழில்நுட்பத்துக்கான தேசிய விருதுகள்
 
கட்டட நிர்மாணங்கள், சிவில் பொறியியல்  அல்லது ஏனைய உட்கட்டமைப்புத் துறைகளில் நுட்பங்களைப் பயன்படுத்தி நிறைவுசெய்யப்பட்ட கருத்திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் கவனத்திற்  கொள்ளப்படும். விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வருடா வருடம் பத்திரிகைகள் வாயிலாக கோரப்பட்டு ஏனைய செயற்திறன் விருது வகைப்படுத்தல்களுடன் பிரசுரிக்கப்படும். புதிய தொழில் நுட்பங்கள்/ நுட்பங்களைப் பயன்படுத்துவதில் உள்ள  செலவுகள் மற்றும் நேரசேமிப்பு, தரம் மற்றும் வளப் பயன்பாடு ஆகிய விடயங்கள் இவ்விருது வழங்கும் போது கருத்திற் கொள்ளப்படுகின்றன.
VI இலத்திரனியல் தொழில்நுட்பத்துக்கான சிறப்பு விருதுகள்
விருது வழங்கும் திட்டம் தற்போது இலத்திரனியல் தொழில்நுட்ப துறை மற்றும் கருத்திட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் மதிப்பீடுகள் செய்யப்படும்.
 
3) புகழ்பெற்ற நபர்களுக்கான விருதுகள்
 

பொறியியல், கட்டடக் கலை, அளவுக் கணிப்பு மற்றும் பொதுவான கட்டுமானத் தொழிற் துறை ஆகிய நிர்மாணக் கைத்தொழிற் துறையின் வித்தியாசமான துறைகளுக்கு விசேட பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புச் செய்த தொழில்வாண்மையாளர்களுக்கு CIDA நிறுவனத்தின் புகழுக்குரிய விருது வழங்கப்படுகின்றது.

நிர்மாணத் துறைக்கு சிறந்த பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புச் செய்தவர்கள், தொழிற் துறையின் புதிதாக இணைந்தவர்கள் மற்றும் ஏனைய பயிற்சி பெறும் தொழில் வாண்மையினருடன் அறிவைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய வெகுமதி மற்றும் அங்கீகாரம் பெற்ற நபர்களுக்கு இவ் விருது வழங்கப்படுகின்றது.

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகள் ஒவ்வொறு மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை கோரப்படுகின்றன. இலங்கைக் கட்டடக் கலை நிறுவனம், இலங்கைப் பொறியியலாளர் நிறுவனம் மற்றும் இலங்கை அளவுக் கணிப்பாளர்கள் நிறுவனம் போன்ற பிரத்தியேக தொழில் வாண்மை கட்டமைப்புக் குழுவொன்றினால் தெரிவுகள் இடம் பெறுகின்றன.

 
 
 
 
  Construction Industry Development Act No - 33 of 2014  
 
© CIDA 2009. All Rights Reserved. Solution by Sri Lanka Telecom (Services) Ltd.