|
நிர்மாண ஒப்பந்ததாரர்கள் தேசிய மட்ட பதிவும் தரப்படுத்தல் திட்டமும் |
|
கடந்த காலங்களில் பல்வேறு வாடிக்கையாளர் நிறுவனங்கள் வெவ்வேறு அளவுகோல்களைப் பயன்படுத்தி ஒப்பந்தக் காரர்களைப் பதிவுசெய்தனர். முரண்பாடுகளைத் தவிர்க்கவும் சீராகப் பராமரிக்கவும் ஒப்பந்தக்காரர்களைப் பொதுவான அடிப்படையில் பதிவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. பொதுப் பதிவுத் திட்டம் 1989 ஆம் ஆண்டு ICTAD இனால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இத்திட்டம் 1993, 1995 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது. தற்போது அப்பதிவுத் திட்டம் CIDA நிறுவனத்தினால் முன்னெடுக்கப்டுகின்றது. (நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை) ( ICTAD நிறுவனத்திற்கான பதில் நிறுவனம்) பதிவு மற்றும் தரப்படுத்தலானது எந்த குறிப்பிட்ட ஒப்பந்தமும் தொடர்பு படாமல் எதிர்கால ஒப்பந்தக்காரர்களின் திறன்களில் பல்வேறு வகையான மற்றும் கருத்திட்டங்களின் அளவுகளில் தமது பொதுத் திறன்களைத் தீர்மானிக்க மேற்கொள்ளும் வெளிப்படையான சீராக்கமாகும். ஒரு ஒப்பந்தக்காரர் அத்துறையில் பெற்றுள்ள அனுபவம், ஊழியர்கள் வேலைத்தளம் ,இயந்திரங்களுடனான தொழில் நுட்பத்திறன் , நிதியிடும் திறன் ஆகிய முக்கிய விடயங்களை மதிப்படுவதன் மூலம் பதிவு மற்றும் தரப்படுத்தலானது தீர்மானிக்கப்படும். ஆரம்பத்தில் இத் திட்டத்தின் கீழ் நிதி நிதி விதிமுறைகளின் அடிப்படையில் 10 தரங்களாக ( M 1 – M 10 ) ஒப்பந்தக்காரர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 2008 ஆம் ஆண்டு M தர அமைப்பு திருத்தி அமைக்கப்பட்டு C 1 தொடக்கம் C 10 எனும் புதிய தர அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு திருத்தப்பட்டு CS2 தொடக்கம் C9 வரை புதிய பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொள்ள ICTAD (தற்போது CIDA ) பதிவானது ஒரு கட்டாயத் தேவையாக அமைந்தது. அத்துடன் 2500 க்கும் மேற்பட்ட நிர்மாணத்துறை ஒப்பந்தக்காரர்கள் CIDA நிறுவனத்தில் பதிவுசெய்துள்ளனர். ஒப்பந்தக்காரர்கள் தொடர்பான தரவுத்தளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. |
|
(1) பதிவுத் திட்டத்தின் நோக்கங்களும் பயன்களும் |
|
|
வாடிக்கையாளர் நிறுவனங்கள் தர அமைப்பைப் பின்பற்றுவதன் மூலம் கருத்திட்டத்துக்குத் தகுதியான ஒப்பந்தக்காரரைத் தெரிவு செய்து கொள்ள முடியும். முக்கிய ஒப்பந்தங்களுக்கான முன் தகைமையைக் கருத்திற் கொள்ளுதல் இப் பதிவுத் திட்டத்தின் நோக்கமாகாது. |
 |
தமது திறனுக்கப்பால் கருத்திடத்தை மேற்கொள்வதிலிருந்து ஒப்பந்தக்காரர்கள் தவிர்ந்திருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களது சுய விருத்தியை மேம்படுத்திக்கொள்ள தர அமைப்பு ஒப்பந்தக்காரரை ஊக்குவிக்கின்றது. |
 |
கருத்திட்டங்களை வரையறுக்கப்பட்ட காலம், தர இலக்கு, செலவு என்பன அடிப்படையில் நிறைவு செய்வதனை ஒப்பந்தக்காரர்கள் உறுதிசெய்தல் வேண்டும். |
|
|
(2) யாருக்கு இது பொருந்தும் |
|
இலங்கையில் கட்டட / சிவில் பொறியியல், இலத்திரனியல் தொழில்நுட்பம், பைலிங் மற்றும் விசேட நிர்மாணக் கைத்தொழில்களை வியாபார நோக்கில் நடாத்திச் செல்லும் ஒப்பந்த நிறுவனங்கள் மாகாண செயலாளர்களிடத்தில் அல்லது கம்பனி பதிவு சட்டத்தின் கீழ் கம்பனிகள் பதிவாளரிடத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கையர்கள் குறைந்தளவு 51% உரிமையைக் கொண்டிருத்தல் வேண்டும். |
|
(3) பதிவு செல்லுபடியாகுதல் |
|
ஒரு பதிவு 03 வருடங்களுக்கு மாத்திரம் செல்லுபடியாகும். அதன் பின்னர் பதிவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். |
|
(4)
ஒப்பந்தக்காரர் பதிவுத் திட்டத்தின் தரங்கள் மற்றும் நிதி வரையறைகள். |
|
நிர்மாணக் கைத்தொழிலின் சமகால நிலைக்கேற்ப ஒப்பந்தக்காரர் பதிவுத் திட்டத்தில் நிதி வரையறைகள் அமைக்கப்பட வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் மதிப்பீட்டுக்கான புள்ளித் திட்டம்’ அதற்கமைய மாற்றப்படும். நிர்மாண ஒப்பந்தக்காரர்களை தரம் பிரிப்பதற்கான வழிகாட்டிகள் (CIDA/ID/10) CIDA தகவல் மையத்தில் விற்பனைக்கு உண்டு. அனைவரினதும் வசதிக்காக ( பல்வேறுபட்ட துறைகளுக்கும் பல்வேறுபட்ட நிறங்களுடைய) ஒரு பதிவுப் புத்தகம் வழங்கப்படும். திட்டங்களின் தரங்களுக்கான சுருக்கக் குறியீடுகள்’ “ C ” (கட்டட மற்றும் சிவில் பொறியியல்), “ EM” (மின் இயந்திர சேவைகள்), “ SP ” (விசேட நிர்மாணங்கள்) , “ GP ” ( பைலிங் ) ஆகியனவாகும். நிதி வரையறைகள் கீழே தரப்பட்டுள்ளன. |
|
எனினும் முன்னைய “ M” அமைப்பு 2010 செப்டம்பர் மாதம் 1 ஆந் திகதியிலிருந்து செல்லுபடியாகாது. |
|
அத்தகைய வாடிக்கையாளர் நிறுவனங்கள் புதிய ‘C’ திட்டத்தின் “நிதி வரையறைகள்” அடிப்படையில் தங்களின் கருத்திட்டங்களுக்கான கேள்வி அறிவித்தல்களை அறிவிக்குமாறு வேண்டப்படுகின்றனர். |
|
|
|
பிரதான ஒப்பந்தக்காரர் : |
|
வகை |
தரம் |
நிதி எல்லைகள (ரூபா. மில்) |
ஒரு வருடத்திற்கான பதவுக் கட்டணம் ரூபா |
கட்டட நிர்மாணம் |
CS2 |
X > 3000 |
500,000.00 + VAT |
பெருந் தெருக்கள் |
CS1 |
3000 ≥ X > 1500 |
150,000.00 + VAT |
பாலம் |
C1 |
1500 ≥ X > 600 |
75,000.00 + VAT |
நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு |
C2 |
600 ≥ X > 300 |
42,000.00 + VAT |
நீர்பாசன மற்றும் நில வடிகாலமைப்பு |
C3 |
300 ≥ X > 150 |
37,000.00 + VAT |
அள்ளுதல் மற்றும் சீர்படுத்தல் |
C4 |
150 ≥ X > 50 |
31,000.00 + VAT |
கோடை கால நீர் வடிகால் |
C5 |
50 ≥ X > 25 |
26,000.00 + VAT |
அரிப்பு தடுப்பான்கள்,தாங்கு சுவர்கள் மற்றும் சீர்படுத்தல் |
C6 |
25 ≥ X > 10 |
20,000.00 + VAT |
|
C7 |
10 ≥ X > 05 |
15,000.00 + VAT |
|
C8 |
05 ≥ X > 02 |
8,000.00 + VAT |
|
C9 |
02 ≥ X |
6,000.00 + VAT |
|
|
நிதி எல்லைகள் (2015 யூன் மாதம் முதல் செல்லுபடியாகும்) |
|
விசேட ஒப்பந்தக்காரர் |
|
விடயங்கள் |
துணை விடயங்கள் |
தரம் |
நிதி வரையறைகள் (ரூபாய் மில்லியன்களில்) |
|
மின், இயந்திர சேவைகள், (EM) |
இயந்திர காற்றோட்டம் மற்றும் வெப்பக் கட்டுப்பாடு (MVAC)
குளிரூட்டல்(RF)
மின்சாரப் பொருத்துதல்கள் (தாழ் மின்னழுத்தம்) (EI-LV)
குழாய் அமைவு மற்றும் வடிகால் திட்டம் (PD)
தூக்கு கருவிகள், இயங்கும் படிக்கட்டுக்கள் மற்றும் இயங்கு கருவிகள் (EET)
மின் உற்பத்தி இயந்திரங்கள் (Gen)
மின்சாரப் பொருத்துகை (நடுத்தர மின்னழுத்தம் ) (EI-MV)
மேலதிக தாழ் மின்னழுத்தப் பொருத்துகைகள் (தரவு, தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள்) (ELV)
தீயைக் கண்டறிதல், பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்தல் (FDPS)
மருத்துவ எரிவாயு அமைப்புகள் (MG)
LP எரிவாயு அமைப்புகள் (LPG) கனரக உருக்குக் கட்டுருவாக்கங்கள் (HSF) |
EM 1 |
X ≥ 50 |
31,000/- + VAT |
EM 2 |
50 ≥ X > 25 |
26,000/- + VAT |
EM 3 |
25 ≥ X > 10 |
20,000/- + VAT |
EM 4 |
10 ≥ X > 02 |
15,000/- + VAT |
EM 5 |
02 ≥ X |
5,650/- + VAT |
விசேட கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் (SP-C) |
அலுமினியம் மற்றும் பூர்த்தியாக்குபவர்கள் (A&F)
தரை, சுவர் மற்றும் உட்கூரை பூர்த்தியாக்குபவர்கள் (FW&C) [கட்டாயமாக முடிவைக் குறிப்பிட வேண்டும்]
தச்சு மற்றும் மூட்டு வேலைப்பாடுகள் (Carp)
மென்மையான உலோக வேலை (ME)
நில வடிவமைப்பு (LA)
தளபாடம், பொருத்துதல்கள் மற்றும் உபகரணங்கள் (FF&E)
தண்ணீர் காப்பு (WP)
நீர் தடாகங்கள் (SP)
கைத்தொழில் துறை
உள்நாட்டுமண் தட்டுதலும் நிலைப்படுத்தலும் (SN) ) |
SP1 |
X ≥ 50 |
31,000/- + VAT |
SP2 |
50 ≥ X > 25 |
26,000/- + VAT |
SP3 |
25 ≥ X > 10 |
20,000/- + VAT |
SP4 |
10 ≥ X > 02 |
15,000/- + VAT |
SP5 |
02 ≥ X |
5,650/- + VAT |
கொன்கிரீட் தட்டிடல் |
கணிக்க முன்னுள்ள குவியல்கள்
துளையிட்டுக் கணித்து இடப்படுத்திய குவியல்கள் |
GP-P |
X ≥ 50 |
25,000/- + VAT |
GP-B1 |
X ≥ 150 |
50,000/- + VAT |
GP-B2 |
150 ≥ X > 50 |
25,000/- + VAT |
GP-B3 |
50 ≥ X > 10 |
11,500/- + VAT |
GP-B4 |
10 ≥ X |
6,500/- + VAT |
|
|
மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு CIDA நிறுவனத்தின் அவிருத்திப் பிரிவைத் தொடர்புகொள்ளவும். CIDA நிறுவனத்தில் பதிவு செய்துள்ள ஒப்பந்தக்காரர்கள் பற்றிய தகவல்களை இணையத் தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். |
|